Police exam 10th tamil

Very important points for Police exam 10th tamil

                                   பத்தாம் வகுப்பு

 • கனிச்சாறு நூலின் ஆசிரியர் பாவலேறு பெருஞ்சித்திரனார்,
 • பெருஞ்சித்திரனார் இதழ் தென்மொழி, தமிழ்ச்சிட்டு.
 • பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார் ? பெருஞ்சித்திரனார். 
 • சாகும்போது தமிழ் படித்து சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் கா.சச்சிதானந்தன்.
 • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் ஆசிரியர் கால்டுவெல்.
 • உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.
 • மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் தேவநேய பாவணர்.
 • சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் தமிழழகனார்.
 • திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் அல்லூர்.
 • புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர் எழில்முதல்வன்.
 • நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்கொரு புலவன் என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் பாரதியார்.
 • இந்தியா, சுதேசமித்திரன் இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர் பாரதியார்.
 • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் முல்லைப்பாட்டு.
 • தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் ஆறு ( வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை )
 • பாடுஇமிழ் பனிக் கடல் பருகி ” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது ? கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
 • பெரிய மீசை சிரித்தார் இலக்கணக்குறிப்பு –  பண்புத்தொகை
 • “காலின் ஏழடிப் பின்சென்று “ என்ற வரி இடம்பெற்ற நூல் பொருநராற்றுப்படை
 • கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் மலைபடுகடாம்
 • கோபல்லபுரத்து மக்கள் –  கி ராஜநாராயணன்
 • தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் – ஒன்பது வகை(எழுவாய் தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமைத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர்)
 • பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
 • குலசேகர ஆழ்வார் காலம் எட்டாம் நூற்றாண்டு
 • வழு எத்தனை வகைப்படும் ஏழு வகை (திணை வழு, பால் வழு, இட வழு, கால வழு, வினா வழு, விடை  வழு, மரபு வழு).
 • வழாநிலை எத்தனை வகைப்படும்  – ஏழு வகை
 • வழுவமைதி எத்தனை வகைப்படும்  – ஐந்து வகை  ( திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால வழுவமைதி, மரபு வழுவமைதி )
 • காலம் என்ற நூலை எழுதியவர் ஸ்டீபன் ஹாக்கிங்
 • சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்  –   செய்குதம்பிப் பாவலர்
 • நீதி வெண்பா –   செய்குத்தம்பிப் பாவலர்
 • திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது 3 காண்டம்  (மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம்) 64 படலங்கள் 
 • வினா எத்தனை வகைப்படும்  – ஆறு வகை(  அறிவினா அறியா வினா ஐய வினா கொளல் வினா கொடை வினா ஏவல் வினா )
 • விடை எத்தனை வகைப்படும் – எட்டுவகை(  சுட்டு மறை விடை நேர் விடை ஏவல் விடை வினா எதிர் வினாதல் விடை உற்றது உரைத்தல் விடை உறுவது கூறல் விடை இனமொழி விடை )
 • பொருள்கோள் எத்தனை வகைப்படும்  –  எட்டுவகை
 • பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும் 2 ( ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் )
 • இரு பாலுக்கும் பொதுவானவை ( காப்பு, செங்கீரை, தால், சப்பானி, முத்தம், வருகை, அம்புலி)ஆண்பால் –  சிற்றில் சிறுபறை சிறுதேர்பெண்பால் –  கழங்கு அம்மானை ஊசல்
 • இராமாவதாரம் என்ற நூலை இயற்றியவர் ?  கம்பர்
 • கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது
 • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர் சா.கந்தசாமி
 • பெரும்பொழுது ஓராண்டின் ஆறு கூறுகள்

             கார்காலம்                   –              ஆவணி, புரட்டாசி

             குளிர் காலம்               –              ஐப்பசி, கார்த்திகை

             முன்பனிக்காலம்     –              மார்கழி, தை

              பின்பனிக்காலம்      –             மாசி, பங்குனி

              இளவேனிற்காலம்    –            சித்திரை, வைகாசி

              முதுவேனிற் காலம்   –           ஆனி, ஆடி

 • சிறுபொழுது ஒரு நாளில் ஆறு கூறுகள்
   1. காலை       –              6 முதல் 10 வரை
   2. நண்பகல் –              10 முதல் 2 வரை
   3. ஏற்பாடு     –              2 முதல் 6 வரை
   4. மாலை        –             6 முதல் 10 வரை
   5. யாமம்         –             10 முதல் 2 வரை
   6. வைகறை   –            2 முதல் 6 வரை
 • திணையும் பொழுதும்

 • தேன்மழை நூலின் ஆசிரியர் சுரதா
 • சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர் மா.பொ. சிவஞானம்
 • சாகித்திய அகாதமி விருது பெற்ற ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலை எழுதியவர் மா.பொ.சிவஞானம்
 • எனது போராட்டம் யாருடைய வரலாற்று நூல் ?  மா.பொ.சிவஞானம்
 • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்( முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்) மூன்று காண்டங்களை உடையது( புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் ,வஞ்சிக் காண்டம்)முப்பது காதைகளை உடையது சிலப்பதிகாரம்.
 • வேருக்கு நீர் ‘ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
 • புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும் ( வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை)
 • முத்தையா என்னும் இயற்பெயரைக் கொண்டவர் கண்ணதாசன்
 • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர் கண்ணதாசன்
 • பா எத்தனை வகைப்படும் நான்கு வகைப்படும்( வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா )
 • சிறுகதை மன்னன் –  ஜெயகாந்தன்
 • சாகித்ய அகாதமி விருதையும், ஞானபீட விருதும் பெற்றுள்ளார் ஜெயகாந்தன்.
 • தமிழின் முதல் அகராதி சதுரகராதி என்னும் நூலைப் படைத்தவர் வீரமாமுனிவர்.
 • வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்னியாசி’ என்னும் பெயரை வைத்தவர் சந்தாசாகிப் (இஸ்மத் சன்னியாசி என்றால் தூய துறவி)
 • கல்மரம் நூலின் ஆசிரியர் திலகவதி.

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page